கொவிட்-19 பரவல் காரணமாக தென்கொரியாவில் சிக்கித் தவித்த 245 இலங்கையர்கள் இன்று காலை தென்கொரிய ஏயர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி அவர்கள் தென்கொரியாவின் இஞ்சியோனில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் கே.ஏ.எல் -9473 என்ற தென்கொரிய ஏயர்லைன்ஸின் சிறப்பு விமானத்தின் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததும், பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அழைத்து வரும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமையவே இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.