(எம்.மனோசித்ரா)
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதவி வகித்த அரச உத்தியோகத்தர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிசாருக்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

குறித்த ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.