சவுதி அரேபியாவில் முதல் முறையாக சல்மா பிண்ட் ஹிஜாப் அல்-ஒடேய்பி எனும் பெண்மணி ஒருவர் நேற்று நடைப்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் முறையாக சவுதி அரேபியாவில் இத்தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.