இந்தியாவின் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் மூடுபனி காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜல்பைகுரி மாவட்டத்தின் துப்குரி நகரத்துக்கு திருமண விருந்தினர்களை கொண்டு செல்லும் பஸ்ஸொன்றே நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜல்தகா பாலம் அருகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரண்டு ஆண்கள், ஆறு பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜல்பைகுரி சூப்பர்ஸ்பெஷாலிட்டி வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் காயமடைந்த 18 பேரில் 4 பேர் ஜல்பைகுரி சூப்பர்ஸ்பெஷாலிட்டி வைத்தியசாலையிலும், மூன்று பேர் வட வங்காள மருத்துவக் கல்லூரியிலும், ஒருவர் ஜல்பைகுரி சதர் வைத்தியசாலையிலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.