(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில், ருவான் மற்றும் சாகலவுக்கு  அழைப்பு | Virakesari.lk

 இன்றைய தினம் இரு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து இவ்விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது. 

அதன்படி ஆணைக் குழுவின் இறுதி அரிக்கை இம்மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய தினமும் சாட்சி விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட போதும் சுகயீனம் காரணமாக சாட்சியளிக்க வர முடியாமல் போனதாக கூறபப்டும்  சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சாட்சியம்  முக்கியமாக கருதப்படும் நிலையில், இதுவரை அது பதிவு செய்யப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.