இலங்கையில் கொரோனா  தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இறுதியான மூன்று கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா  தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டு பெண்களும், ஒரு ஆண்ணும் இறுதியாக கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கேகாலை அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர் மாவனெல்ல வைத்தியசாலையிலிருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – 06 பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.