வவுனியாவில் மேலும் 45  பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு வசிக்கும் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் 20 பேருக்கு தொற்று இருக்கின்றமை இன்று காலை உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை வவுனியா நகர வியாபார நிலையங்களை சேர்ந்த பலரிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுதப்பட்டது. அவர்களில் 25 பேருக்கு தொற்றிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியாவில் கடந்த பத்து நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.