(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 54 000 ஐ கடந்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை மாலை 8.30 மணி வரை 337 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 54 087 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 46 594 பேர் குணமடைந்துள்ளதோடு 7223 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திங்களன்று பதிவான மரணங்கள்

நேற்று திங்கட்கிழமை மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு 3 ஐ சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் மோசமடைந்த நீரிழிவு நோய் ஆகும்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்துவாரத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கடந்த 15 ஆம் திகதி முதியோர் இல்லத்தில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

களுத்துறையைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலை, இதய நோய் மற்றும் நீரிழிவு நிலைமை தீவிரமடைந்தமை மரணத்திற்கான காரணமாகும்.

தெஹிவலையைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்ட போது அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி நிமோனியா நிலைமையே இவரது மரணத்திற்கான காரணமாகும்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலைமையென குறிப்பிடப்பட்டுள்ளது.