(எம்.மனோசித்ரா)
தலதா மாளிகையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமைக்கு உக்ரேன் சுற்றுலா பிரயாணிகள் காரணமல்ல. அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், உக்ரேனிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தளதா மாளிக்கைக்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தளதா மாளிகை நிர்வாகத்தினரிடமிருந்து நான் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனவே இவ்விடயத்தில் அநாவசியமாக அவர்களை தொடர்புபடுத்த வேண்டிய தேவை கிடையாது என்றார்.