(எம்.மனோசித்ரா)
18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனையானது மிகவும் ஆபத்தானதாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் நாடு குழப்ப நிலைக்கு முகங்கொடுக்கக் கூடும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர ஒழுக்கமுடைய சமூகமொன்றை உருவாக்குவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சளிப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகக் கூறியிருக்கிறார். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விடயமாகும்.
இவ்வாறான செயற்திட்டங்களின் ஊடாக இராணுவ தன்மையிலான சிந்தனை நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தும். எனவே இது போன்ற பயிற்சிகளை வழங்குவதற்கு முன்னர் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.
இராணுவ பயிற்சி மூலம் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் இராணுவ பயிற்சியை நிறைவு செய்து தற்போது உயர் அதிகாரங்களில் இருப்பவர்கள் பல்வேறு முரண்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அவதானித்து கொண்டு தான் இருக்கின்றோம். சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆயுத பயிற்சியை வழங்குவது நாட்டுக்கு ஆபத்தானது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM