(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் பரிசோதகர்களாக நான் இணைத்துக்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்படும் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டத்தரணிகளை பொலிஸுக்கு இணைத்துக்கொள்ளும் அதிகாரமும் எனக்கு இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண, சட்டத்தரணிகள் 150 பேர் பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக்கொள்ளப்போவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

மொழி அடிப்படையில் இணைத்துக்கொள்ளும்போது சிங்கள பிரதேசங்களுக்கு சிங்கள மொழி தெரிந்தவர்களும் சிறுபான்மை மக்கள் இருக்கும் பிரதேசங்களுக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களும் இணைத்துக்கொள்ளும் நிலைமை ஏற்படும் என்றே நினைக்கின்றேன். ஆனால் அனைத்து பிரதேசங்களுக்கும்  தமிழ், சிங்கள மொழியில் திறமையானவர்களை நியமிப்பதே நல்லது.

அத்துடன் பொலிஸ் திணைக்களத்துக்கு சட்டத்தரணிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் நீதித்துறைக்கு எவ்வாறான அதிகாரம் இருக்கின்றது என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.