சீனாவில் ஹுஷான் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கியவர்களில் 12 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி ஷாண்டோங் மாகாணத்தின் குய்சியா நகரத்திற்கு அருகிலுள்ள ஹுஷான் சுரங்கத்தில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், 22 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுரங்கத்திற்குள் சிக்கிதவிக்கும் தொழிலாளர்களை மீட்க போராடி வரும் நிலையில், 12 பேர் உயிருடன் இருப்பதாக  தகவல் கிடைத்துள்ளது.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மருந்து அனுப்புமாறு வலியுறுத்தி ஒரு குறிப்பை மீட்புப் படையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.