சிலம்பரசனின் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

19 Jan, 2021 | 04:14 PM
image

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகிவரும் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு, தன் உடல் எடையை குறைத்து சிலம்பரசன் நடிப்பில் தயாரான 'ஈஸ்வரன்' திரைப்படம் பொங்கலன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று, நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் வசூல் செய்து வருகிறது. 

 இதைத்தொடர்ந்து சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிலம்பரசனுடன் மற்றொரு இளம் நடிகரான கௌதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் கலையரசன், 'அசுரன்' பட புகழ் நடிகர் டிஜே, எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பத்து தல' படத்தின் வசனங்களை 'ஆட்ட நாயகன்' படத்தின் இயக்குனரான ஆர் எஸ் ராமகிருஷ்ணன் எழுத, 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை  ஏ ஆர் ரகுமான் வெளியிட்டார். தனி நாற்காலியில் கம்பீரமாக சிலம்பரசன் அமர்ந்திருக்கும் தோரணையும், அவர் எதிரில் மற்ற நடிகர் நடிகைகள் பவ்யமாக நிற்கும் தோற்றமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35