வெளியேறுவதற்கு முன்னர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கினார் ட்ரம்ப்

Published By: Vishnu

19 Jan, 2021 | 09:43 AM
image

பதவிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனவரி 26 முதல் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளின் பயணத் தடையை நீக்குவதற்கான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்டார்.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை இந்த உத்தரவு நீக்குவதுடன், பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு பயணிகளை பயணிக்கவும் அனுமதிக்கிறது.

கொரோனா வைரஸ் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் ஆதரவைப் பெற்ற பின்னர், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கும் உத்தரவில் டிரம்ப் திங்களன்று கையெழுத்திட்டார்.

ட்ரம்பின் இந்த உத்தரவு பகிரங்கப்படுத்தப்பட்ட உடனேயே, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேக்கவுள்ள ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி,

எங்கள் மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், நிர்வாகம் இந்த கட்டுப்பாடுகளை ஜனவரி 26 ஆம் திகதி நீக்க விரும்பவில்லை என்று டுவிட் செய்துள்ளார்.

அத்துடன் தொற்றுநோய் மோசமடைந்து வருவதோடு, மேலும் தொற்று வகைகளும் உலகெங்கிலும் உருவாகி வருவதால், இது சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் அல்ல என்று அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08