உக்ரைன் சுற்றுலாப்பயணிகளால் 42 மில்லியன் ரூபா வருமானம் - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 3

19 Jan, 2021 | 09:31 AM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அண்மையில் சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது பல விமர்சனங்களும் எதிர்மறையான கருத்துக்களும் வெளியிடப்பட்ட போதிலும் அரசாங்கத்திற்கு 42 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. 

அத்தோடு எதிர்பார்த்ததை விட குறைந்தளவான சுற்றுலா பிரயாணிகளுக்கே கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இம்மாதம் 21 ஆம் திகதி சகல விமான சேவைகளுக்கும் விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ளதோடு , அதன் பின்னர் நாளொன்று 2,500 சுற்றுலா பிரயாணிகளையேனும் நாட்டுக்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இம்மாதம் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்படவுள்ளமை மற்றும் விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட போது இதனைக் கூறிய அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

30 இலட்சம் மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுற்றுலாத்துறையை சார்ந்தவர்களாக உள்ளனர். கொவிட் அச்சுறுத்தலின் பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் அண்மையில் விமான நிலையம் திறக்கப்பட்ட போதிலும் முழுமையாக சுற்றுலாத்துறைக்காக திறக்கப்படவில்லை. எனினும் இது வரையில் வெளிநாடுகளிலில் சிக்கியிருந்த சுமார் 70,000 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் சுற்றுலாத்துறையை ஆரம்பிக்காமல் தொடர்ச்சியாக விமான நிலைய செயற்பாடுகளை முடக்கி வைத்திருந்தால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

எவ்வாறிருப்பினும் சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அவற்றுக்கு மத்தியில் நாம் சுற்றுலாத்துறை செயற்பாடுகளை கட்டம் கட்டமாக ஆரம்பித்து குறைபாடுகளை அறிந்து அவற்றை சரிசெய்து கொண்டு தொடர்ச்சியாக பயணிக்க வேண்டும். இதேவேளை அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் நாம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்தளவானோருக்கே கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் அண்மையில் சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சுமார் 42 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. சுற்றுலாத்துறை என்பது நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் முக்கியத்துவம் வகிக்கும் துறையாகும். இதனை மேம்படுத்த ஊடகங்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். 

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நாளொன்றுக்கு சுமார் 2500 சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு சுற்றுலா பிரயாணிகள் வரும் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் ஆலோசனை கோவை வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகள் அவற்றுக்கு ஏற்றாட் போல சுற்றுலாத்துறையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை தயாரித்துள்ளன. அதே போன்று எமது நாட்டுக்கு பொறுத்தமான வேலைத்திட்டங்கள் எம்மால் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் மக்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும் பொறுப்பும் கடமையும் ஊடகங்களுக்கு இருக்கிறது. எனவே அதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08