இந்தியாவின், குஜராத்தில் லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ இன்று தெரிவித்துள்ளது.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கோசாம்பா பகுதியிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் பொலிஸ் தகவல்களை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொழிலாளர்கள் சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தபோதே லொறி அவர்கள் மீது ஏறி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் இழப்பு குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு உத்தரவிட்டார்.