(லியோ நிரோஷதர்ஷ்ன்)

கூட்டு எதிர் கட்சியின் பாதயாத்திரையில் இருந்த சிறுவன் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனக பண்டாரதென்னகோண் ஆகியோரிடம் குறித்த சிறுவன் தொடர்பில் பொலிசார் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளனர். 

கடந்த மாதம் 28 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியினர் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி பாதயாத்திரையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்தும் 5 நாட்கள் இடம்பெற்ற இந்த பாதயாத்திரையில் நிட்டம்புவ பகுதியில் வைத்து சிறுவன் ஒருவனை பாதயாத்திரையில் ஈடுப்பட வைத்தமை குறித்து சர்ச்சை ஏற்பட்டது. 

குறித்த சிறுவன் தொடர்பில் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு சிறுவர்களை அரசியல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துவது குற்றமாகும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எனவே நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனக பண்டாரதென்னகோண் ஆகியோரிடம் சிறுவனை அடையாளம் காணும் பொருட்டு வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள உள்ளது.

ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட காணொளி ஆதாரங்களை கொண்டு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சிறுவனை அரசியல் நோக்கங்களுக்காக  பாதயாத்திரையில் பயன்படுத்தியமை குறித்து விசாரணைகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.