(செ.தேன்மொழி)

அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகளின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உட்பட ஆறு பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம - தர்கா நகரத்தில் இன்று திங்கட்கிழமை 100 பேருக்கு எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஆறு பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதான பொலிஸ் பரிதோசகர் ஒருவருக்கு , பொலிஸ் கான்ஸ்டபில் இருவருக்கும் , சார்ஜன்கள் இருவருக்குமே இவ்வாறு  வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் , அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அளுத்கம பொலிஸ் நிலையம் தற்போது தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் ,  பொலிஸ் நிலையத்தில் கடமைப்புரிந்து வரும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது வேறு ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.  பின்னர் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.