நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை.  நடிகர் விஷ்ணு விஷால், கருணாகரன், நடிகை மியா, நடிகர்கள் பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான ஃபேண்டசி கொமடி திரைப்படம். வசூலில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இரண்டாம் பாகத்திற்கு முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குனரும், அவருடைய உதவியாளருமான கார்த்திக் பொன்ராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

அறிவியல் புனைகதை பாணியில் தயாராகும் 'இன்று நேற்று நாளை 2 ' படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதன்போது தயாரிப்பாளர் சி வி குமார், நடிகர்கள் கருணாகரன், விஷ்ணு விஷால், இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் , இயக்குனர் ரவிகுமார் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

'ராட்சசன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகவிருக்கும் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.