உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை ஒன்பதரைக் கோடியை கடந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை நிலவரப்படி உலகளாவிய ரீதியில் 95,003,533 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுாி செய்யப்பட்டுள்ளதோடு, 2,029,938 பேர் உயிரிழந்துள்ளார்கள் என ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை 52,269,644 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்திலுள்ளன. ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில்  23,928,643 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுாி செய்யப்பட்டுள்ளது..உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகளாவன உயிரிழப்புகளும் (397,500) அங்கு பதிவாகியுள்ளது.