இயக்குனரும், நடிகருமான கணேஷ் பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் ''கட்டில்'' படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை ''மக்கள் செல்வன்'' விஜய் சேதுபதி வெளியிட்டார்.

''யமுனா'' என்ற படத்தை இயக்கிய இயக்குனர்  கணேஷ் பாபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ''கட்டில்'' இந்த திரைப்படத்தின் இயக்குனரான கணேஷ் பாபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

இவர்களுடன் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், நடிகை தேவதர்ஷினி, நடிகர் ஷ்யாம் ஆகியோர்களுடன் தயாரிப்பாளரும், மறைந்த 'இயக்குனர் சிகரம்' பாலச்சந்தரின் மருமகளுமான கீதா கைலாசம் இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். 

வைட் ஆங்கிள் ரவி சங்கர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பை மூத்த கலைஞரான பி லெனின் கவனிக்கிறார்.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பழங்காலத்திய புகைப்படத்தை போல் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருப்பதால் இணையத்தில் இதற்கு பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது.