புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜூனியர் எம்ஜிஆர் வி. ராமச்சந்திரன் நடிப்பில் தயாராகும் 'கேங்ஸ்டர் 21' படத்தின் படப்பிடிப்பை 'உலகநாயகன்' கமலஹாசன் தொடங்கி வைத்தார்.

''அட்டு'' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ''கேங்ஸ்டர் 21'' இந்தப் படத்தில் ஜூனியர் எம்ஜிஆர் வி ராமச்சந்திரன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ராய் லட்சுமி நடிக்கிறார். சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, விக்ரம் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ டி ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம். என். வீரப்பன் தயாரிக்கிறார்.

ஜூனியர் எம்ஜிஆர் வி. ராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை ''உலகநாயகன்'' கமலஹாசன் தொடங்கி வைத்ததால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.