ஈரானுடனான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் பி -52 எச் என்ற வெடிகுண்டு விமானம் மத்திய கிழக்கில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு அமெரிக்காவின் இராணுவ வலிமையை காட்டியுள்ளது.

ஈரானிய பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகள் வட இந்தியப் பெருங்கடலில் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் நிறுத்தத்திலிருந்து 100 மைல்கள் தொலைவில் தரையிறங்கியதாகக் கூறப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த ரோந்து பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்த நிலையில், அமெரிக்க விமானப்படை இப்பகுதியில் இதேபோன்ற பயணங்களை மேற்கொண்டது சமீபத்திய மாதங்களில் ஐந்தாவது முறையாகும்.

சனிக்கிழமை விமானப் பணியாளர்கள் வெற்றிகரமாக இந்த பணியை முடித்ததாகக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது.

அமெரிக்காவின் பி -52 எச் வெடிகுண்டு விமானத்தின் ரோந்து பணிகளை ஈரானிய வெளியுறவு அமைச்சர்  ஜவாத் ஸரீஃப் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார்.