வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து

By Vishnu

18 Jan, 2021 | 08:35 AM
image

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இன்னும் 36 ஓட்டங்கள் மாத்திரமே தேவை என்ற நிலை இங்கிலாந்து அணிக்கு உருவாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இலங்கை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கடந்த 14 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அணித் தலைவர் ஜோ ரூட்டின் இரட்டை சதத்துடன் (228) 421 ஓட்டங்களை பெற்றது.

இதனால் 286 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

திரிமான்ன 76 ஓட்டங்களுடனும், எம்புல்தெனிய எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க திரிமான்ன டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். 

2013 ஆம் ஆண்டில் காலியில் நடந்த பங்களாதேஷுக்கு எதிராக ஒரு சதம் (ஆட்டமிழக்காமல் 155 ஓட்டம்) பெற்ற திரிமான்ன அதன் பின்னர் அடித்த சதம் இதுவாகும்.

எனினும் திரிமான்ன 111 ஓட்டங்களுடன் (251 பந்து, 12 பவுண்டரி) விக்கெட் காப்பாளர் பட்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களுடனும், திக்வெல்ல 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நடுத்த வரிசை வீரர்களில் அஞ்சலோ மெத்தியூஸ் மாத்திரம் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடினர். இறுதி விக்கெட்டுக்காக ஆட்டமிழந்து வெளியேறிய மெத்தியூஸ் 4 பவுண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இறுதியில் இலங்கை அணி 2 ஆவது இன்னிங்ஸில் 136.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 359 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஜாக் லீச் 5 விக்கெட்டுகளையும், டொம் பெஸ் 3 விக்கெட்டுகளையும் மற்றும் சாம் குர்ரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த எளிய இலக்கை இங்கிலாந்து வீரர்கள் நேற்றே எடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களை திக்குமுக்காட வைத்தனர்.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஜாக் கிராலி மற்றும் டொமினிக் சிபிலி ஆகியோரை எம்புல்தெனிய தனது சுழற்பந்து வீச்சு மூலமாக குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். 

அதன் பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் ஜோ ரூட்டும் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று, ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெயர்ஸ்டேவும், டேனியல் லாரன்ஸும் விக்கெட்டுக்களை பறிகொடுக்காமல் பாதுகாத்துக் கொண்டனர்.

இறுதியாக ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 38 ஓட்டங்களை எடுத்தது. 

போட்டியின் ஐந்தாவதும், இறுதியமான நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 36 ஓட்டங்கள் மாத்திரமே தேவை என்ற நிலை உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15