நாட்டில் மேலும் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 14 ஆம் திகதி  பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 15 ஆம் திகதி உடப்புசல்லாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 16 ஆம் திகதி கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த  87 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 16 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த  72 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 17 ஆம் திகதி பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த  66 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு - 8 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜனவரி 17 ஆம் திகதி உடுதும்பறை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இன்றையதினம் 749 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 53,062 ஆக உயர்வடைந்துள்ளது. 

நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் இன்று மாலை வரை  45 171 பேர் குணமடைந்துள்ளதோடு 7207 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.