வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களுடன் தொடர்புகளை பேணிய வைத்தியசாலை ஊழியர்களிற்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கந்தசாமி கோவில் வீதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியாவில் இன்றையதினம் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 205 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.