அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ! முடக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட பகுதிகள் எவை ?

Published By: Digital Desk 4

17 Jan, 2021 | 08:38 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. எனினும் தொற்றாளர்களை விட தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 8.30 மணி வரை 749 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 53,062 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் இன்று மாலை வரை 45 171 பேர் குணமடைந்துள்ளதோடு 7207 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை மினுவாங்கொடை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டதோடு களுத்துறையில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணி முதல் மினுவாங்கொடை மற்றும் மாத்தளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

அதற்கமைய மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழக்கு கல்மடுல்ல மற்றும் மேற்கு கல்மடுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மாத்தளை பொலிஸ் பிரிவில் வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு (356) , மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு (356 பீ) மற்றும் தெஹிபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் (356 ஏ) மாவத்தை கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

களுத்துறை மாவட்டத்தில் 725 களுத்துறை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு பகுதி, 725 ஏ களுத்துறை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , 725 பீ வேலாபுற கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு பகுதி , 727 மஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு , 727 பீ குடா ஹீனட்டிங்கல பிரிவில் மஃபுர் சந்திவங்கய பகுதி தவிர்ந்த எஞ்சிய பகுதிகள் , 727 சி குருந்துவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு , 727 ஈ அக்கரகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு , 730 வெட்டுமகட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , 730 ஏ கலபுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு பகுதி , 730 பீ கட்டுகுருந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு பகுதி மற்றும் பேருவலை பொலிஸ் பிரிவில் 743 ஏ அக்கரமலை கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

சனியன்று பதிவான மரணம்

நேற்று சனிக்கிழமை ஒரு கொரோனா மரணம் பதிவாகியது. அதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 256 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துல்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றால் மோசமடைந்த இதய நோய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04