திருகோணமலை சம்பூர் கடற்பகுதியில்; சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மீனவர்களை நேற்று (05) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 3 மீன்பிடி படகுகள் மற்றும் 3 தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.