இரண்டு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது: அஜித்ரோஹண

Published By: J.G.Stephan

17 Jan, 2021 | 03:13 PM
image

(செ.தேன்மொழி)
பொரளை - சிரிசரவுயன குடியிருப்பு தொகுதியில் சுமார் இரண்டு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் , பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்துமுல்ல - சிரிசரவுயன குடியிருப்பு தொகுதியில் நேற்று இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குடியிருப்பு தொகுதியின் ஐந்தாம் மாடியில் உள்ள வீடொன்றை சோதனைச் செய்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அங்கு காணப்பட்ட அலுமாரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 638 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஆறு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்தே 59 வயதுடைய பெண்ணொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளை நாட்டுக்கு கடத்திய குழுக்களின் செயற்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் , இவருக்கு எவ்வாறு அது கிடைக்கப் பெற்றது என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருவதுடன் , அந்த பெண்ணை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் எதிர்ப்பார்த்துள்ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46