(செ.தேன்மொழி)

காலி - போத்தல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகருக்காராம பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாகருக்காராம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து 25 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.  சந்தேக நபர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் , விடுவிக்கப்பட்டவர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை , கல்கிஸ்ஸ – கட்டுகுருந்துவத்த வீதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது , ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து இரண்டு கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்  பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.