நாட்டின் சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

16 ஆண் கைதிகளும், சிறைச்சாலை அதிகாரியொருவருமே இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

இதனால் சிறைச்சாலை கொத்தணியில் சிக்கிய கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 4,310 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 123 சிறை அதிகாரிகளும் 3,945 கைதிகளும் பூரண குணமடைந்துள்ளனர். தற்ப‍ேது ஒன்பது அதிகாரிகளும் 233 கைதிகள் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.