இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.

குறித்த விடயத்தை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு,திருகோணமலை மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்படவுள்ளனர்.

அழைத்துவரவுள்ளவர்களில்  43 ஆண்களும் 32 பெண்களும் உள்ளடங்ககின்றனர்.