இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு குவைத் அனுமதி

Published By: Vishnu

17 Jan, 2021 | 12:20 PM
image

தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை மற்றும் பிற இடங்களிலிருந்து புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களை உள்நுழைய குவைத் அரசாங்கம் இன்று முதல் அனுமதித்துள்ளதாக குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தில் உள்நாட்டு பணியாளர்களாக பணியாற்ற இந்தியா தனது நாட்டினரை ஊக்கப்படுத்தவில்லை, அதனால் குறைவானவர்கள் அத்தகைய வேலைகளை குவைத்தில் மேற்கொள்கின்றனர்.

இருப்பினும் அவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்ய விண்ணப்பித்தால் அவர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் குவைத் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தொடர்ந்து உள்நாட்டு பணியாளர்களை குவைத்துக்கு அனுப்புகிறது, எனினும் அந் நாட்டு உள்ளக பணியாளர்களில் 11 சதவீத இலங்கையர்கள் மாத்திரம் உள்ளனர்.

எத்தியோப்பியா, நேபாளம் மற்றும் இந்தோனேசிய ஆகிய நாடுகளின் பெண்களையும் உள்ளக வீட்டுப் பணிப்பெண்களாக பயணியல் அமர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் குவைத்து மேற்கொண்டுள்ளது.

ஆனால் ஒப்பந்தம் எப்போது கையெழுத்திடப்படும் என்பது குறித்த தெளிவான தேதி இல்லை. 

பங்களாதேஷ் ஆண் வீட்டு உதவியாளர்களை மட்டுமே குவைத்துக்கு அனுப்புகிறது, கோட் டிவார், பெனின் மற்றும் மடகாஸ்கரில் இருந்து சில நூற்றுக்கணக்கானவர்கள் தொழிலாளர்கள் மாத்திரம் குவைத்துக்கு செல்கின்றனர்.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பணியாளர்களை குவைத்துக்கு அனுப்பிய இரண்டாவது நாடான பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரை, இது தொடர்பான இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தின் பிரச்சினை. குவைத் டைம்ஸ் வட்டாரத்தின்படி, ஒருங்கிணைந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், புதிய உள்நாட்டு உதவியாளர்களை அனுப்புவது உடனடியாக மீண்டும் தொடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04