நோர்வேயில் கொரோனா தடுப்பூசி போட்ட 23 பேர் பலி : நெதர்லாந்தில் 100 பேருக்கு பக்க விளைவு

17 Jan, 2021 | 03:33 PM
image

நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில், நோர்வேயில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் நெதர்லாந்தும் கடந்த 6 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகிறது. இதில் இதுவரை சுமார் 47 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இதில் வீக்கம், கண்களைச்சுற்றி தடித்தல் போன்ற கடுமையான ஒவ்வாமை பிரச்சினைகள் மற்றும் வழக்கமான தலைவலி, சோர்வு, தடுப்பூசி போட்ட இடத்தில் வலி போன்ற சாதாரண பிரச்சினைகளே இருந்ததாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பல நாடுகளில் பைசர் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நோர்வேயில் இந்த தடுப்பூசி போட்டதில்  23 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணைகள்  நடந்து வருகிறன.

இதேபோன்று இஸ்ரேல், பல்கேரியா போன்ற பல நாடுகளிலும் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33
news-image

ஜின்ஜியாங்கில் தனது பாரிய மனித உரிமை...

2022-09-27 16:39:59
news-image

இந்தியாவில் தயாராகும் அப்பிள் கைத்தொலைபேசி

2022-09-27 15:29:19
news-image

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல...

2022-09-27 12:55:09