முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 2,578 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொவிட் பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.