பிரான்ஸில் மருத்துவதுறையில் கல்வி பயின்று வந்த யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட மாணவிகள் இருவர் அகால மரணம் அடைந்தமை அங்குவாழும் தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் வசித்து வரும் செல்லத்துரை குலேந்திரா தம்பதியினரின் மகளான கார்த்திகா கடந்த கடந்த எட்டாம் திகதி அன்று பிரான்ஸில் அகால மரணமடைந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சொந்த இடமாகவும் பிரான்ஸில் வசித்து வந்தவருமான சந்திரராசா என்பவரின் மகளான சினேகா கடந்த 13ஆம் திகதி அன்று அகால மரணம் அடைந்துள்ளார்.

இவரும் பிரான்ஸில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளதுடன் பிரான்ஸ் செவ்ரோன் தமிழ்ச்சோலையின் மாணவியும் ஆவார். கல்வி, விளையாட்டு ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசிப்பத்து வந்தவரான சினேகாவின் மரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.