அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதனை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கலிஃபோர்னியா, மிச்சிகன், பென்சில்வேனியா, கென்டக்கி மற்றும் புளோரிடா உள்ளிட்ட பல மாநிலங்கள் சனிக்கிழமை நிலவரப்படி பாதுகாப்பை அதிகரிக்க தங்கள் தேசிய காவல்படைகளை செயல்படுத்தியுள்ளன.

ஜனவரி 6 ஆம் திகதி ட்ரம்ப் சார்பு கலவரக்காரர்களால் நாட்டின் சட்டமன்றத்தின் இருக்கை பயங்கரமாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வாசிங்டன், கொலம்பியா மாவட்டத்திலுள்ள அதிகாரிகளும் அதிக வன்முறைக்கு ஆளானார்கள்.

இந் நிலையில் பைடனின் பதவியேற்பு நாளினை முன்னிட்டு சனிக்கிழமை முதல் புதகிழமை வரை 50 மாநில கேபிடல் கட்டிடங்களுக்கு வெளியே ஆயுதமேந்திய போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையினர் (எஃப்.பி.ஐ) எச்சரித்ததை அடுத்து இந்த பாதுகாப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் அதிக வன்முறை அபாயங்கள‍ை எதிர்நோக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ட்ரம்பின் பரவலான தேர்தல் மோசடி பற்றிய ஆதாரமற்ற ஆதாரங்களுக்கு மேற்கண்ட மாநிலங்கள் மையமாக இருந்தன. அவர் தனது ஆதரவாளர்களை அமைதியின்மையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தினார், பைடனின் வெற்றியை உறுதிப்படுத்த காங்கிரஸ் கூடிவந்தபோது அமெரிக்க கேபிடல் கட்டிடத்தையும் தனது ஆதரவாளர்களை கொண்டு தாக்கினார்.

இந் நிலையில் தற்போது பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மிச்சிகனில், லான்சிங்கில் கேபிட்டலைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் இருந்து படையினர் அணி திரட்டப்பட்டுள்ளனர். நம்பகமான அச்சுறுத்தல்கள் குறித்த கவலையை சுட்டிக்காட்டி சட்டமன்றம் அடுத்த வாரம் கூட்டங்களை இரத்து செய்துள்ளது.

இல்லினாய்ஸ் ஆளுநர் ஜே.பி.பிரிட்ஸ்கர், தனது மாநிலத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் வரவில்லை என வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இருப்பினும் ஸ்பிரிங்ஃபீல்டில் உள்ள கேபிட்டலைச் சுற்றி 250 க்கும் மேற்பட்ட மாநில தேசிய காவல்படையினரைச் சேர்ப்பது உட்பட பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய தேசிய காவல்படை வீரர்கள் வொஷிங்டன் கொலம்பியா மாவட்டத்தில் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

நகரத்திற்குள் பாலங்கள் மற்றும் பல கணக்கான சாலைகள் மூடப்படவிருந்தன, அதே நேரத்தில் நேஷனல் மால் மற்றும் அமெரிக்காவின் பிற முக்கிய இடங்களுக்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கப்படவுள்ளது.