தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினை அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் (FTO) தொடந்தும் உள்ளடக்கியுள்ளது.

10/8/1997 முதல் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு அமெரிக்காவின் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் (FTO) குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் 219 ஆவது பிரிவின்படி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரால் நியமிக்கப்பட்ட அமைப்புகளாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க போராட்டத்தில் FTO ஒரு முக்கிய பங்கை வழங்குவதுடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான ஆதரவைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகவும் அமைந்துள்ளது.