நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது.

அத்துல்கோட்டை பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், இன்றையதினம் மேலும் 372 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றையதினம் இதுவரை 719 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.