(எம்.மனோசித்ரா)

நாட்டில் தொடர்ந்தும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று சனிக்கிழமை மாலை 06.00 மணி வரை 343 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 51,937 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 44,746 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6,936 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 641 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

எஹெலியகொட பொலிஸ் பிரிவில் மின்னான , போபத்எல்ல, விலேகொட, அஸ்கங்குல மற்றும் யகுதாகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

பாணந்துரை பொலிஸ் பிரிவில் 675 தொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் , பேருவல பொலிஸ் பிரிவில் மக்கொன கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மக்கொன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.