Published by T. Saranya on 2021-01-16 19:41:42
(எம்.மனோசித்ரா)
நாட்டின் ஜனாதிபதியானவர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மதிப்பவராகக் இருக்க வேண்டும். மாறாக சர்வாதிகார போக்கில் பயணிப்பவராகவும் பாசிசவாதியாகவும் இருக்கக் கூடாது. எனவே ஜனாதிபதியின் அந்த கொள்கைக்கு எதிராக போராடுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
மேலும், 30 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்ட பெருமை 90 வீதம் அப்போதைய இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவையே சாரும்.
அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பங்களிப்பு காணப்பட்டது. ஆனால் பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் விமர்சனத்துக்குரியதாகவே இருந்தது என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.