Published by T. Saranya on 2021-01-16 18:54:56
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரிய மேலதிக வகுப்புகள் நடாத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பேணி, ஒரு மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளக் கூடிய ஆகக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவர்கள் 100 பேருக்கு குறைவான இட வசதியை கொண்ட இடங்களில் வழமையாக வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் அரைவாசியினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.