குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்ற உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்படும் வீடியோக்கள்  விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தர பிரேதசத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அந்த பெண்களை மிரட்டியும் வருகின்றனர். 

இந்த நிலையில், உத்தரப் பிரேதசம் முழுவதும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் பலாத்கார வீடியோக்களை விற்பனை செய்யத் தொடங்கியுமுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் விற்பனையாகின்றன. 

30 வினாடிகள் முதல் 5 நிமிடம் வரையான இந்த வீடியோக்களை ரூ.50 முதல் 150 (இந்தியா ரூபா) வரை விற்று வருகின்றனர். 

இந்த வீடியோக்களை ரகசியமான முறையில், நம்பகமான வாடிக்கையாளர்களின் உதவியுடன் விற்பனை செய்து வருகின்றனர். வீடியோக்கள் பரவலான முறையில் விற்கபடுவதால் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த வீடியோக்களை சிலர் பேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் கூட பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.