பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வட்ஸ் ஆப்  செயலி புதிய தனியுரிமைக் கொள்கை திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் பயன்பாட்டின் சேவை விதிமுறைகள் குறித்து அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு தகவல் வந்தது. 

மேலும் புதிய நிபந்தனைகளை புதுப்பிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வட்ஸ் ஆப் செயலியைப யன்படுத்த முடியாது எd தெரிவித்தது.

இதனால் வட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இதுதொடர்பாக வட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கமளித்தது.

இந்நிலையில், வட்ஸ்ஆப் நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட புதிய வர்த்தக அம்சங்களை செயல்படுத்தும் முடிவை ஒத்தி வைத்துள்ளது.  அந்நிறுவனத்தின் தகவல் பரிமாற்றம் பற்றிய விசயங்களுக்கு பயனாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இதன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதனால், வரும் பெப்ரவரி 8 ஆம் திகதியில், ஒருவரது வட்ஸ்ஆப் கணக்கும் தற்காலிக ரத்து செய்யப்படவோ அல்லது நீக்கமோ செய்யப்படாது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.  இதேபோன்று வட்ஸ்ஆப்பில், புதிய தனியுரிமைக் கொள்கை  மற்றும் பாதுகாப்பு எப்படி செயலாற்றுகிறது என்பது பற்றிய தவறான தகவல்களை தெளிவுப்படுத்த போகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

மே மாதத்திற்குப் பிறகு நாங்கள் எங்கள் வணிகத் திட்டங்களை செயற்படுத்துவோம்.

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு end-to-end encryption முறையில் வட்ஸ்அப் உதவியது, இப்போதும் எதிர்காலத்திலும் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களை அணுகிய அனைவருக்கும் மற்றும் உண்மைகளை பரப்பவும் வதந்திகளை நிறுத்தவும் உதவிய பலருக்கும் நன்றி. தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழியாக வட்ஸ்அப்பை உருவாக்குவதற்கு எங்களிடம் உள்ள அனைத்தையும் தொடர்ந்து செய்வோம். என தெரிவித்துள்ளது.