உலகளாவிய ரீதியில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 9 கோடியே 40 இலட்சத்தை நெருங்கிறது. 

இன்று சனிக்கிழமை காலை 07.52 மணிவரையான ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவபரங்களின் படி,  உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 2,006,987 பேர் உயிரிழந்துள்ளதோடு, 93,787,372  பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

23,520,563 தொற்றாளர்களையும் மற்றும் 391,922 உயிரிழப்புகளையும் பதிவு செய்து கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்திலுள்ளது.

இந்தியா மற்றும் பிரேசில் முறையே 10.5 இலட்சம், 8.393 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்திலுள்ளது.

இதற்கிடையில், முதல் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 60 சதவீத மக்களுக்கு ரஷ்யா தடுப்பூசி போடலாம் என கூறப்படுகிறது. இது மிகவும் தீவிரமான சாதனையாக இருக்கும் என்று ரஷ்ய நுகர்வோர் உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரோஸ்போட்ரெப்நாட்ஸர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 55,761 புதிய கொரோனா வைரஸ் தொற்றார்களும் மற்றும் 1,280 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கையில், தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்திற்கு அமலில் இருக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதேநேரம் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய தடுப்பூசி  திட்டத்தை இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.