பிக் பேஷ் இருபதுக்கு 20 லீக் தொடரின் 40ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இப்போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே பிளெட்சர் ஆட்டமிழக்காது 89 ஓட்டங்களையும் கார்ட்ரைட் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சில், வெலேண்ட் மற்றும் பிரிக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 14.2 ஓவர்கள் நிறைவில் 68 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெட் ரென்ஷோவ் 20 ஓட்டங்களையும் ஜொனாதன் வெல்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 5 விக்கெட்டுகளையும் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் சஹீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பில்லி ஸ்டேன்லேக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஆந்ரே பிளெட்சர் தெரிவுசெய்யப்பட்டார்.