பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நாளை (16.01.2021) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி இந்த சொற்பொழிவை ஆற்றவுள்ளார்.

நிகழ்வின் தலைமை உரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் வழங்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியின்  “பாரதிஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்” என்ற தலைப்பிலான உரை இடம்பெறும்.

இந்த உரை குறித்த கருத்துரையை பேராசிரியர் வ. மகேஸ்வரன் ஆற்றவுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது. நிகழ்வில் பங்கேற்பதற்கு கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்த முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

https://meet.google.com/yrn-ndma-azg

பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டுப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாதந்தோறும் சொற்பொழிவொன்றை ஒழுங்கமைத்து நிகழ்த்திவருகிறது. இந்த சொற்பொழிவுத் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தமை குறிப்பிடத் தக்கது.