கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

பயணப் பொதிகள் என்ற போர்வையில் பயணிகளால் இரகசியமான முறையில் கொண்டு செல்லப்படக் கூடிய வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை இனங்காண்பதற்காக இந்த நாய்களுக்கு அஸ்கிரியவிலுள்ள இலங்கை பொலிஸ் பயிற்சி பாடசாலையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்கள் ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையினால் உண்மையான மாதிரிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட நடைமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் , இவ்வாறான நடைமுறை சோதனை இலங்கையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.