ரஞ்சனின் பிரஜா உரிமை ரத்தாகும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 

Published By: Digital Desk 4

16 Jan, 2021 | 07:35 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நான்கு வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜா உரிமை 7 வருடங்களுக்கு இல்லாமல்போகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அவரது பிரஜா உரிமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான்கு வருடங்களுக்கு கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாகி இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றவியல் குற்றத்துக்கு ஆளாகியதன் மூலம் அவரது சிறைத்தண்டனை 6மாதங்கள் முடிவடைந்த பின்னர், அவரது பாாரளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகிவிடும். 6மாதங்களுக்குள் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால், அவரது பாராளுமன்ற ஆசனம் வெறுமையாகும்.

அவரது பாராளுமன்ற இடத்துக்கு பொதுத் தேர்தலில் அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளரை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடுவோம்.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனையில் 6மாத காலம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போவதுடன் அவரது பிரஜா உரிமையும் இல்லாமல் போகின்றது.

அதாவது, அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை காலம் முடிவடைந்து ,அவர் விடுதலையாகும் தினத்தில் இருந்து 7 வருட காலங்களுக்கு அவரது பிரஜா உரிமை இல்லாமலாகும். அதன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36