ஓமான் வளைகுடாவில் ஈரான் கடற்படை பயிற்சி மேற்கொண்ட தருணத்தில் ஏவுகணை சோதனையையும் நடத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 280 கி.மீற்றர் தொலைவிலான இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட ஏவுகணையை சோதனை செய்ததாக ஈரான் தெரிவித்திருந்தது.

‘‘ஈரான் கடற்பகுதியில் எந்தவொரு மீறலும், படையெடுப்பும் நிகழ்ந்தாலும் தரையில் இருந்தும், கப்பலில் இருந்தும் ஏவுகணை தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்பதை எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிகப்பெரிய இராணுவ கப்பலின் அறிமுக விழாவையொட்டி ஈரான் கடற்படை இரு நாள்  பயிற்சியை மேற்கொண்டது.